அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

Advertisements

மஸ்கட்:

9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

இதில் பிரிவில் இடம்பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை நேற்று சந்தித்தது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது

இறுதியில், ஆட்ட நேர முடிவில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் தீபிகா 4 கோலும், கனிகா சிவாச் 3 கோலும் அடித்தனர். இதனால் பிரிவிலிருந்து 3 வெற்றியுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *