
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்மூலம் வந்தார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பிய வடமாநில பெண்ணைப் பார்ததும் மோப்ப நாய் சைகையால் காட்டிக்கொடுத்தது.
அந்தப் பெண்ணைச் சோதித்தபோது, அவர் கொண்டு வந்த காலிபிளவர் மற்றும் மஸ்ரூம்களுக்கு இடையே இருந்தைதை பார்த்து அதிகாரிகள் ஆடிப்போனார்கள். அதன் மதிப்பு பல கோடியாகும்.
சென்னை மீனாம்பாக்கத்தில் அண்ணா சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. ஒரு மணி நேரத்தில் 50க்கு மேற்பட்ட விமானங்கள் வந்து இறங்கி செல்கின்றன. இங்கு உலகின் பல்வேறு நாட்டு விமானங்கள் வந்து செல்வதால் எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும்.
அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எல்லா கண்டத்திற்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான வசதி உள்ளது. சென்னையிலிருந்து, துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கின்றன.
அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்குத் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று வழக்கம்போல் தீவிரமாகப் பரிசோதித்தனர்.
அதில் வடமாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் நிறுத்தித் தீவிரமாக விசாரித்தனர்.
அவர், தனது உடைமைகளில் காலிபிளவர் மற்றும் மஸ்ரூம்கள் இருப்பதாக அவரது உடைமைகளை மோப்பம் பிடித்த சுங்கத்துறை மோப்ப நாய், தரையில் அமர்ந்தபடி, தனது கால் நகங்களால் தரையை கீறி சைகை காட்டியது. அவ்வாறு சைகை காட்டினால், அந்த உடைமையில் சந்தேகப்பொருள் இருக்கிறது என்று அர்த்தம்.
சுங்க இலாகா அதிகாரிகள் பெண் பயணியின் உடைமையைத் திறந்து பரிசோதித்தார்கள். அதில் 14 பார்சல்கள் இருந்துள்ளது. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது காலிபிளவர் மற்றும் மஸ்ரூம்களுக்கு இடையே உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பார்சல்களில் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.6 கோடியாகும்.
கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வடமாநில இளம்பெண்ணை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் விசாரணையில் அந்தப் பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.
எனவே உயர்ரக கஞ்சாவை சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காகக் கடத்தி வந்தார்? என்று கைதான இளம்பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.




