தமிழக அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த டி.டி.வி. தினகரன்..!

சமூக விரோதிகள் எந்தவித அச்சமுமின்றிச் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் அளவுக்குத் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சென்னை கே.கே.நகரில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடியைப் பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். சேலம் அருகே வீட்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த திமுக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டது உட்படத் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றங்கள் பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக விரோதிகள் எந்தவித அச்சமுமின்றிச் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவிற்குத் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ரவுடி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, காவல்துறையை முழுச் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *