கீர்த்தனா மாணவியிடம் ஒரு சகோதரியைப் போலவே பேசினார்- அமைச்சர் ராஜ்மோகன்.!

பள்ளியில் ஆய்வு செய்தது குறித்து அமைச்சர் கீர்த்தனா எந்தவொரு ஆடியோ அல்லது வீடியோவையும் வெளியிடவில்லை என்றும், இந்த விவகாரத்தை ஊடகங்கள்தான் சர்ச்சையாக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டுச் சென்னைக்குத் திரும்பிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவதற்கான முதல்கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசுப் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆய்வு மேற்கொள்வது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு மரபுதான் என்று கூறினார். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எந்தவொரு ஆடியோ அல்லது வீடியோவையும் வெளியிடவில்லை என்றும், ஊடகங்கள்தான் அதனைச் சர்ச்சையாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தக் குற்றங்களுக்கும் தாய்க் காரணியாக விளங்கும் போதைக் கலாச்சாரத்தை இந்த அரசு வேரோடு அழிக்கும் என்றும் உறுதியளித்தார். தமிழகத்தில் கல்வித்துறையை மேம்படுத்தப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *