கூடுதல் விலைக்கு மது விற்றால் பணிநீக்கம் செய்யப்படும் : அமைச்சர் விக்னேஷ்.!

Advertisements

இனிமேல் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் பணிநீக்கம் வரை நடவடிக்கை இருக்கும் என்றும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 25 விழுக்காடு ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு 25 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்படி உதவி விற்பனையாளருக்கு 14 ஆயிரத்து 340 ரூபாயிலிருந்து 17 ஆயிரத்து 925 ரூபாயாக ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறினார். விற்பனையாளர்களுக்கு 19 ஆயிரத்து 413 ரூபாயாகவும், மேற்பார்வையாளருக்கு 22 ஆயிரத்து 313 ரூபாயாகவும் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்று கூறினார். இனிமேல் கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் வரை நடவடிக்கை இருக்கும் என்று குறிபிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *