Cuddalore: இலங்கை மறுவாழ்வு மைய மக்களுக்கு 72 வீடுகள் ஒப்படைப்பு!

Advertisements

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சுமார் 3 கோடி 60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 72 வீடுகளை இலங்கை மறுவாழ்வு மைய மக்களுக்கு வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இலங்கை  மறுவாழ்வு  மையம் முகாம் செயல்படுகிறது. இந்த முகாமில் 1990 ஆம் ஆண்டு முதல் 72 குடும்பங்களைச் சேர்ந்த 256 பேர் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழக சேமிப்பு கிடங்கில் தடுப்புகளை அமைத்து வசித்து வருகின்றனர்.

இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உடையார்குடி வருவாய்  கிராமத்திற்கு உட்பட்ட ருத்திரசோலை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடம் கண்டறியப்பட்டு அதில் நான்கு வீடுகள் அமையப்பெற்ற 18 தொகுப்புகளால் பிரிக்கப்பட்டு ஒரு வீடு தலா 5 லட்சம் மதிப்பில்
சுமார் 3 கோடி 60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 72 வீடுகள் ஊராட்சி ஒன்றியத்தின்  மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது.

ரூபாய் 18 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலைகளும் 42 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்ட் சாலைகள், 11 லட்சம் மதிப்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின்இணைப்புகள்29 லட்சம் மதிப்பில் ஐந்து எண்ணிக்கைலான சிறுபாலங்கள் உடைய தார் சாலை பணிகள், 22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேலும் 12 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மற்றொரு குடிநீர் நீர்த்தேக்க தொட்டியெனப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன்  மேம்படுத்தப்பட்ட  குடியிருப்புகள் இன்று  திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்  அருண்தம்புராஜ் தலைமை தங்கினார்.  கூடுதல் ஆட்சியர் சரண்யா, வரவேற்புரையாற்றினார்.தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கேப்பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு குடியிருப்புப் பகுதிகளைத் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைச் செல்வன், பேரூராட்சி தலைவர் எஸ். கணேசமூர்த்தி ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் மறுவாழ்வு மைய துணை இயக்குனர் ரமேஷ், சிதம்பரம் சார் ஆட்சியர், ராஷ்மிராணி, ஒன்றிய குழுத் தலைவர் சகதியா பர்வின்நிஜார்அகமது, பேரூராட்சி மண்ற துணைத் தலைவர் ராஜேஸ்வரிமணிமாறன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் தனிகாசலம், உதவி பொறியாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *