Hansika Motwani : மின்னுவது உங்கள் உடையா.. ரசிகர்களைக் குழம்பவிடும் அழகில் ஹன்சிகா!

Advertisements

Actress Hansika Motwani : பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா என்பவரைக் கடந்த 2022ம் ஆண்டுத் திருமணம் செய்துகொண்டார்.

குழந்தை நட்சத்திரமாகவே பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

தொடக்கத்தில் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

தொடர்ச்சியாகப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, இறுதியாகத் தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “பார்ட்னர்” என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

தற்பொழுது “ரவுடி பேபி”, “மேன்” மற்றும் “காந்தாரி” ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்த வருகிறார். ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இணைய தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Hansika

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *