
கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்கள் இன்னும் சீரமைக்கப்பட்டு வருவது ஐசிசிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையடுத்து இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன.
பிப்ரவரி 19-ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இவர் 2021 நவம்பர் மாதம் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாகச் செயல்பட்டது எனக்குப் பெருமை அளிக்கிறது.
என்னால் முடிந்தவரை இந்தப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன்.
ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது ராஜினாமா முடிவுக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதாவது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக மைதானங்கள் தயார் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதமே ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் மெத்தன போக்கு காரணமாக இன்னும் மைதானங்கள் சரியாகத் தயாராகவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுதான் ஜெஃப் அலர்டிஸ் பதவியை ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாகக் கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்கள் இன்னும் சீரமைக்கப்பட்டு வருவது ஐசிசிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
