இஸ்ரேலிய, பாலஸ்தீனிய பிணைக் கைதிகள் விடுதலை..!

Advertisements

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தில்லியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்ததால் ‘பாலோ-ஆன்’ செய்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 390 ரன்கள் சேர்த்தது.

அதிகப்பட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜான் கேம்பல் 115 ரன்களும் ஷாய் ஹோப் 109 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மற்றம் பும்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

இதன் மூலம் இரண்டாம் இன்னிங்சில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. மூன்று விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 58 ரன்களும் சாய் சுதர்ஷன் 39 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு வழிவகைச் செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *