
பதவி ஏற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறி, இந்து அல்லாத மத நடவடிக்கைகளைப் பின்பற்றியதால் 18 ஊழியர்கள்மீது திருப்பதி தேவஸ்தான போர்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருப்பதி உள்ளிட்ட எந்தக் கோவிலுடன் தொடர்பில்லாத பதவிகளுக்கு இடமாற்ற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலைக்குச் சேர்ந்த இந்துக்கள் அல்லாத 18 ஊழியர்கள், இந்துக்களின் நம்பிக்கையைப் பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றிருந்தனர். தற்போது அந்த உறுதிமொழியை அவர்கள் பின்பற்றவில்லை.
இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தேவஸ்தான போர்டின் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது எனச் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகக் கூறிய குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான போர்டின் இந்த முடிவுகுறித்து பேசிய எம்.பி. அசாதுதீன் ஓவைசி, “இந்து அல்லாதவர்களைத் திருப்பதி தேவஸ்தான போர்டு நீக்கும்போது, எந்த அடிப்படையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆதரிக்கிறது.
அதில் மாநில முஸ்லிம் வக்பு வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆக்வே சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வக்பு திருத்த மசோதாவின்படி முஸ்லிம் அல்லாதவர்களை எப்படி வக்பு வாரியத்தில் உறுப்பினராக்க முடியும்? வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானது.
இது முற்றிலும் தவறானது” என்று தெரிவித்தார்.
