நீட் தேர்வு – தில்லியில் தேர்வர்களுக்கு இலவச பேருந்து பயணம்!

Advertisements

நீட் தேர்வை எழுதவுள்ள தேர்வர்கள் அனைத்து டி.டி.சி அரசு பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜூன் 21 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுதவுள்ள தேர்வர்களுக்கு உதவும் வகையில், தேர்வு நுழைவுச்சீட்டைக் காண்பித்தால் அனைத்து டி.டி.சி அரசு பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தினத்தில், எந்தவொரு மாணவரும் எவ்விதமான சிரமத்தையும் சந்திக்கக்கூடாது என்று கூறினார்.
நீட் தேர்வுக்குத் தயாராகி வரும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், அவர்களின் கடின உழைப்பும் உறுதியும் அவர்களை வெற்றியை நோக்கி வழிநடத்தட்டும் என்று கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *