பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய்… ஆக.15-ல் விஜய் மாஸ் அறிவிப்பு?

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்த முக்கிய ஆலோசனைகளில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தேர்தல் வாக்குறுதியின்படி, இந்தத் தொகையை ரூ. 2500-ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் சுதந்திர தின விழாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த உயர்த்தப்பட்ட தொகையைத் தடையின்றிப் பெற பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் சில முக்கிய அப்டேட்டுகளை உடனடியாகச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, நேரடிப் பணப்பரிமாற்றம் சீராக நடைபெற வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதும், e-KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதும் மிக முக்கியக் கட்டமாகும். வங்கிக்குச் செல்லாமலேயே மொபைல் செயலி மூலமாக இந்த எளிய சரிபார்ப்பு முறைகளை எப்படிச் செய்வது என்பது குறித்து தற்பொழுது விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அடித்தட்டு, நடுத்தர குடும்பத்தினருக்கு பேருதவியாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முக்கிய அம்சமாகவும் இருந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு திமுக வாக்குறுதியில் உரிமைத் தொகை ரூ 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. அதிமுகவோ ரூ 2000 என்றும் தவெக ரூ 2500 வழங்கப்படும் என சொன்னது.

இந்த நிலையில் தவெக ஆட்சி அமைத்ததும் ரூ 2500 உரிமைத் தொகை ஏற்றி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களும் தலா ரூ 1000 மட்டுமே வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி கொடுக்கும் ஆலோசனையில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத்தினத்தன்று விஜய் முதல்முறையாக மூவர்ணக் கொடியை கோட்டை கொத்தளத்தில் ஏற்றி வைக்கவுள்ளார். அப்போது அவர் சில அறிவிப்புகளை வெளியிடும் போது மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பும் இருக்கும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு அறிவித்தால் அந்த ரூ 2500 ஐ பெற பொதுமக்கள் இரு விஷயங்களை செய்ய வேண்டும் என்கிறார்கள். அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

அதாவது உங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டு அது செயல்படும் நிலையில் இருத்தல் வேண்டும். அரசு வழங்கும் நேரடி பணப்பரிமாற்றம் அனைத்தும் ஆதார் அடிப்படையிலேயே அனுப்பப்படுவதால் இதுவே மிக முக்கியமான படிநிலையாகும். நீண்ட நாட்களாகப் பரிவர்த்தனை செய்யப்படாத வங்கிக் கணக்குள் முடக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வங்கியின் மொபைல் ஆப் அல்லது நெட் பேங்கில் மூலம் 2 நிமிடங்களில் e-KYC விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ், ஓடிபி ஆகியவற்றை சரிபார்க்க உங்கள் கையில் உள்ள மொபைல் எண்ணுடன் ஆதார் இணைத்திருக்க வேண்டும். வங்கிக்கு நேரடியாக செல்லாமல் உங்கள் மொபைல் போன் மூலமாகவே வங்கிக் கணக்கின் e-KYC மற்றும் ஆதார் இணைப்பு குறித்த விஷயத்தை சரி பார்க்கலாம்.

அதாவது உங்கள் வங்கி மொபைல் செயலியில் profiles அல்லது services பகுதிக்குச் செல்லவும். அதில் KYC Status அல்லது Aadhar Seeding status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால் Updated என இருக்கும். ஒருவேளை நிலுவையில் இருந்தால் ஓடிபி மூலம் 2 நிமிடங்களில் புதுப்பிக்கலாம். எனவே இந்த அப்டேட் இருப்பது அவசியமாகும்.

தவெக அரசின் இந்த அறிவிப்பு மற்றும் அதற்குத் தேவையான டிஜிட்டல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. ஆகஸ்ட் 15-ல் கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாகக் கொடியேற்றவிருக்கும் முதல்வர் விஜய், மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்து எத்தகைய முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் உச்சத்தை எட்டியுள்ளது. எந்தவொரு தடையுமின்றி இந்தத் தொகையைப் பெற, பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது வங்கிக் கணக்கு மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்வது அரசின் இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள உதவும் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *