Advertisements

சென்னை :
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று வரை கால அவகாசத்தை நீட்டித்து, டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் இணையவழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியாததால், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Advertisements



