பாஜகவுக்காக நான் ராமதாஸை சந்திக்கவில்லை- ஆடிட்டர் குருமூர்த்தி!  

பாஜகவுக்காக நான் ராமதாஸை சந்திக்கவில்லை” – ஆடிட்டர் குருமூர்த்தி

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாமகவில் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி தனக்குத் தெரியாமலேயே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இருவரும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைத் தனித்தனியாகக் கூட்டினர். அன்புமணி கூட்டிய கூட்டத்திற்குச் சென்ற நிர்வாகிகள், ராமதாஸ் கூட்டத்திற்குச் செல்லாமல் தவிர்த்தனர். இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என பாமக நிர்வாகிகள் கோரிக்கை வைத்த நிலையில், இன்று தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *