“2 மாதத்தில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்..!

Advertisements

திமுக ஆட்சியில் மது, கஞ்சா போன்ற வியாபாரம் அதிகளவில் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ திடலில் பாமக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியபோது,  அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக தொண்டர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூட்டணி கட்சிகளோடு சகோதரத்துடன் பழகி தீய சக்தி திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற வியாபாரம் அதிகளவில் உள்ளது என்றும் அதனை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார். இன்னும் 2 மாதத்தில் திமுக ஆட்சி முடிந்து விடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *