Kerala:தற்கொலையில் முடிந்த ரீல்ஸ் காதல்.. டிரோல் செய்தே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை!

Advertisements

கேரளாவில் தனது காதல் பிரேக் அப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மைனர் பெண் இன்ஸ்டாகிராம் இன்புலுயென்சர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த ஆதித்யா நாயர் என்ற அந்த இளம்பெண் கடந்த வாரம் ஜூன் 10 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆதித்யாவை காதலித்து ஏமாற்றிய 21 வயதாகும் பினாய் என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். உயிரிழந்த ஆதித்யா, பினாயுடன் சேர்ந்து இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் செய்துபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

ரீலிஸ் செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதித்யா 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதற்கிடையில் திடீரென இவர்களின் காதல் பிரேக் அப்பில் முடித்த நிலையில் பினாயின் இன்ஸ்ட்டாகிராம் ஃபாலோவர்கள் இணையத்தில் ஆதித்யாவை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கித் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மைனரான தனது பெண்ணைப் பினாய் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி மயக்கி ஏமாற்றியதாகபெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் பினாய் மற்றும் உயிரிழந்த ஆதித்யாவின் மொபைல் போன்களை ஆராய்ந்ததன் மூலம் பினாய்க்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *