
தற்போது இஸ்ரேலுக்கும் – ஈரானுக்கும் இடையே நடைபெற்ற போரில் , சற்றுமுன்பு அமெரிக்கா ஈரானுக்கு பதிலடி தரும் வகையில் தாக்குதலை கடல் வழியாகவும் , வான் வழியாகவும் தீவிர படுத்தியுள்ளது… தற்போது மத்திய பிராந்தியத்தில் நிலவி வரும் உக்கிரமான போர் குறித்து உங்கள் பார்வைக்கு விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு ..!
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது சற்று முன்னர் தாக்குதலை ஆரம்பித்துள்ளன. இஸ்ரேல் அந்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்த நிலையில், தெஹ்ரான் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல ஏவுகணைகள் தெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழக தெரு மற்றும் ஜோம்ஹோரி பகுதியைத் தாக்கியதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஒன்று திரட்டியுள்ள அமெரிக்காவுடன் கூட்டு இராணுவ நடவடிக்கையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் போரை தொடங்கியது நீங்கள் தான் ,ஆகவே போரை முடிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது என்று ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது..
ஈரானின் தலைநகரில் நடந்த தாக்குதல் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம், தெஹ்ரானின் வடக்கு செய்யத்கந்தன் பகுதியிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் அரசுக்கு அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக” இந்த தாக்குதலை “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று விவரித்தார்.மேலும் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பாக இருக்கிறார் இன்று ஈரான் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது,..இந்நிலையில் ஈரானின் ஏவுகணைகளை நொறுக்குவோம் என்று டிரம்ப் கூறி உள்ளார்..
இந்நிலையில், பதிலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஈரான் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்துள்ளன. டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ஈரானின் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலை இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ”ஈரானுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் முன்கூட்டிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யூத நாடாக இஸ்ரேல் உள்ளது. இதனை சுற்றி உள்ள அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாகும். இதனால் இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பாலஸ்தீனத்துடன் காசா பிரச்சனை உள்ளது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து தாக்கினர். இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வகையில் போரை தொடங்கியது. ஹமாஸ் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் தீர்த்து கட்டியது.
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டிருக்கின்றன. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்றே வெளியேற வேண்டும். கிடைக்கும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து அமெரிக்கா செல்ல வேண்டும்” என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹுக்கப்பி திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையே கடும் மோதல் உள்ளது. நாளுக்கு நாள் இந்த மோதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்த வேண்டும்.
இதற்கான யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.ஈரான் உடனடியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான பேரழிவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளார்.
அதுமட்டுமின்றி, மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஈரானையொட்டிய பகுதிகளில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.போர் விமானங்கள், போர் கப்பல்களை டிரம்ப் ஈரானை சுற்றி நிறுத்தி உள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது.
பின்னணி என்ன?
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் தனது ஊழியர்கள், அதிகாரிகளுக்கு இப்படியான அறிவுரையை வழங்கி இருப்பது கவனம் பெற்றுள்ளது. அதோடு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழலை எடுத்து காட்டும் வகையில் உள்ளது. மேலும் ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிவிட்டதா? என்ற கேள்வியை எழுந்துள்ளது. ஏனென்றால் ஈரான் மீது தாக்குதலுக்கு தயங்கமாட்டோம் என்று அமெரிக்கா கூறும்போதெல்லாம் ஈரான் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறியது.
ஈரான் தனது அணு சக்தியை பெரிய அளவில் வளர்த்து வருகிறது. இது தனக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறும் அமெரிக்கா, உடனே இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியுள்ளது. ஆனால், தாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்றும், மருத்துவ நோக்கங்களுக்காகவே அணு சக்தியை பயன்படுத்துகிறோம் என ஈரான் விளக்கமளித்துள்ளது.
இப்படி இருக்கையில், அணு சக்தி விவகாரம் தொடர்பாக, ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்றும், அதில் நாங்கள் சொல்வதை ஈரான் கேட்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். ஆனால், ஈரான் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்தை போடவில்லை. இதற்கிடையில், டிரம்ப் தனது சக்தி வாய்ந்த 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை ஈரான் கடல் பகுதியில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார். ஒப்பந்தம் போடவில்லை எனில் தாக்குதல்தான் என எச்சரித்திருந்தார். இந்த ஒப்பந்தம் குறித்து இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. அதேபோல முன்னெப்போது இல்லாத அளவில் இஸ்ரேலில் அமெரிக்கா தனது போர் விமானங்களை குவித்து வைத்திருக்கிறது.
இதெல்லாம் நிலைமையை பதற்றமாக்கியுள்ளது. எனவே, உடனடியாக தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீன, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அதேபோல, இஸ்ரேலுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் ஜெர்மன் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.




