Tiruppur: செய்தியாளர் மீது தக்குதல்.. தலைமறைவாக இருந்த காவலர் கைது!

Advertisements

திருப்பூர் அருகே செய்தியாளர்மீது கொலை வெறி தக்குதல்நடத்தப்பட்ட விவகரத்தில் நுண்ணறிவு பிரிவு காவலரைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சியில் தாலுகா செய்தியாளராகப் பணியாற்றி வந்தநேச பிரபு என்பவர்  கடந்த மாதம் 10 பேர் கொண்ட நபர்களால் அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டப்பட்டதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்ச்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தநிலையில்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராகப் பணியாற்றி வந்த ராஜாசுபின் என்பவருக்கும் செய்தியாளர் நேச பிரபு என்ப்வருக்கும் முன் விரோதம் இருந்த வந்ததாகக் கூறப்படுகிரது. இதன் காரணமாகக் காவலர் ராஜாசுபின் கூலிப்படையை ஏவிவிட்டு செய்தியாளர் நேசபிரபுவை கொலை வெறி தாக்குதல் நடத்தியது போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த நுண்ணறிவு பிரிவுக் காவலர் ராஜாசுபினை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். இதனிடையே நுண்ணறிவு பிரிவுக் காவலர் ராஜா சுபினை மாவட்ட காவல் துறை பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *