Dharapuram: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி.. 13 கிலோ வெள்ளி சிக்கியது!

Advertisements

தாராபுரம் அருகே கோவையிலிருந்து உரிய ஆவணங்களிலின்றி எடுத்து வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியாக மதுரையிலிருந்து கோவை சென்ற காரைச் சோதனை செய்தனர்.

அப்போது கோவை மாவட்டம் கலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.15 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளி வளையல்கள், வெள்ளி கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அதனைத் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *