Advertisements

இந்தியா முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற ஊழல் நிகழ்வுகள் இப்பொழுது அம்பலமாகி இருக்கின்றன என்பது பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது . இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை நிர்வாகம் செய்வதற்காக ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை கட்டமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது இதில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்
இவர்கள் கோடி கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் ஏராளமான சலுகைகளை சட்டத்துக்கு புறம்பாக செயல்படுத்திய சம்பவம் இப்பொழுது சிபிஐ அதிகாரிகளால் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது . சத்தீஸ்கரில் உள்ள ஒரு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக எட்டு பேரை சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்
55 லட்ச ரூபாய் அவர்கள் லஞ்சம் பெற்ற நிலையில் மேலும் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் எட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஊழல் செய்து வந்த சம்பவங்கள் இவர்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் கிளம்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு எச்சரிக்கை தகவல்கள் தெரிவிக்கப்பட்டு கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன
பல்வேறு கல்லூரிகள் செய்து வந்த ஏமாற்று வேலைகளுக்கு இந்த அதிகாரிகள் துணை போனதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .இந்தியா முழுவதும் ஏராளமான மருத்துவ துறை அதிகாரிகள் நெட்வொர்க் போல் செயல்பட்டு கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது . சிபிஐ அதிகாரிகள் தற்பொழுது இது தொடர்பாக 34 மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்துள்ளனர்
இவர்கள் அனைவருமே மருத்துவத் துறையில் மிக உயர்ந்த பதவி வைத்து வருபவர்கள் என்பது அதிர்ச்சி செய்தியாகும் . இதற்கிடையே மருந்தியல் கவுன்சில் தலைவர் படேல் வீட்டில் அதிகாரிகள் அதிரடி ரைடு நடத்தியுள்ளார்கள் இவரது தலைமையிலான அதிகாரிகள் மருந்தியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக ஒப்புதல் வழங்கியதாக புகார் எழுந்தது மேலும் கல்லூரிகளில் எந்த விதமான ஆய்வும் நடத்தாமல் நற்சான்று அளித்ததும் தெரிய வந்தது
இது தொடர்பாக படேல் மீது ஊழல் வழக்கு பதியப்பட்டு தற்பொழுது அவரது வீட்டில் அதிரடி சோதனை நடந்துள்ளது இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது . மருத்துவத் துறையில் கல்லூரிகள் கட்டமைப்பு தொடர்பாக ஏராளமான தவறுகள் நடைபெற்றுள்ளன என்ற தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Advertisements
