Advertisements

திமுகவுக்கு நட்பு ரீதியில் இருந்த காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இப்பொழுது வில்லனாக மாறி வருகிறார் . தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வ பெருந்தகை கடந்த சட்டசபை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த தொகுதியில் செல்வ பெருந்தகை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுகவினர் இரவு பகல் பாராமல் கடுமையாக பணியாற்றிய நிலையில் தற்பொழுது மீண்டும் தேர்தல் நெருங்கி வருகிறது . இந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கூடாது திமுக தான் போட்டியிட வேண்டும் என்று போர் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அந்த தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள்
சமீபத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்தபோது அவரிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர் . ஸ்ரீபெரும்புதூர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது இதன் பின்னர் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது தற்போது வெற்றி பெற்ற செல்வப் பெருந்தகை இங்குள்ள திமுகவினருக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை மாறாக அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான பலன்களை பெற்று வருகிறார்கள்
அங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் காண்ட்ராக்ட்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியினருக்கு தரப்பட்டுள்ளது எனவே இந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் . இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசை சந்தித்து அவரைதிமுக கூட்டணிக்கு வரும்படி அழைத்ததாக தெரிகிறது
இதனால் செல்வப் பெருந்தகை மீது விடுதலைச் சிறுத்தைகள் கோபமடைந்திருக்கிறார்கள் . இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்களில் ஒருவரான வன்னி அரசு பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு எதிராக செயல்படுகிறார் என அவர் குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements
