Advertisements

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜே பி நட்டாவுக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட இருக்கிறார் .
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் ஜே பி நட்டா இவரது பதவிக்காலம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முடிவடைந்துவிட்டது இருந்தபோதிலும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது .
ஜே பி நட்டாவின் பணிகள் சிறப்பாக இருப்பதாக கூறி அவரது பணி நீடிப்பு தொடர்ந்து வரும் நிலையில் இப்பொழுது அவருக்கு பாரதிய ஜனதா கட்சி ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது . இதன்படி புதிதாக தேசிய தலைவர் பதவியில் யாரை நியமிக்கலாம் என தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்தப் பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்கலாம் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது
அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி தேசிய தலைவரான வானதி சீனிவாசன் ஆகிய மூன்று பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன இவர்கள் மூவருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் அநேகமாக நிர்மலா சீதாராமனுக்கு அந்த பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது
பிரதமர் மோடிதான் இதுகுறித்து முடிவு செய்து அறிவிக்க வேண்டும் எனவே அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்தவுடன் ஜே பி நட்டாவுக்கு பதிலாக ஒரு பெண் தேசிய தலைவராவார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
Advertisements
