
வளமான தமிழகம், வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளப் பதிவில், வளமான தமிழகம், வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி எனவும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததைத் தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்துள்ளனர். இதனால், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.


