தாம்பரத்திற்கு அம்ரித்பாரத் ரயில் நாளை முதல் தொடக்கம் – மோடி.!

Advertisements

திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு அம்ரித்பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு வாராந்திர அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை நாளை திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி காலை சுமார் 10 மணி அளவில் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை வழியாக இரவு 12.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *