ஆடையில் மறைத்து பெண் பயணி கடத்திய ரூ.28 லட்சம் தங்க பேஸ்ட் பறிமுதல்.
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு துபாயிலிருந்து தனியார் விமானம் வந்தது. பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருச்சி, பாலக்கரையை சேரந்த மணிவேல் என்பவரின் மனைவி கீதா (42) அணிந்திருந்த ஆடையில் பேஸ்ட் வடிவில் மாற்றப்பட்ட தங்கத்தை ஒட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெண் அதிகாரிகள் கீதாவை, தனி அறைக்கு அழைத்துச்சென்று அவரது ஆடையை கைப்பற்றி அதிலிருந்த தங்கத்தை பிரித்து எடுத்தனர்.
அதில், ரூ.27.90 லட்சம் மதிப்புள்ள 458 கிராம் தங்கம் இருந்தது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள், கீதாவிடம விசாரணை நடத்தி வருகின்றனர்.