தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Advertisements

உலகப் பொருளாதார சூழல் காரணமாக உலகம் முழுவதும் தங்கம் விலை அதிகரித்து வந்தது. ஏப்ரல் மாத கடைசியில் அட்சய திருதியை நாள் கொண்டாட்டப்பட்டதால் அதுவரை உச்சத்தில் இருந்த தங்கம் விலை, அதற்கு அடுத்த நாட்களில் சற்று குறையத் தொடங்கியது.

நேற்று (மே 2ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. அதாவது 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,755க்கும், ஒரு சவரன் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 7,240க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 57,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *