லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இ.பி.எஸ். கண்டனம்!

கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை உக்கடம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். இதற்கிடையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. அம்மன் அர்ஜூனன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை மேற்கொண்டுள்ள மு.க. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தமிழ்நாட்டில் நடைபெறும் விடியலில், திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடைபெறாத துறையே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *