7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – மதிமுக போட்டியிடாது – வைகோ அறிவிப்பு!

Advertisements

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. எங்களது முழு ஆதரவும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி வெற்றி பெறுவதற்கு மட்டுமே. கூட்டணியின் வெற்றிக்காக நாங்கள் முழு மூச்சுடன் உழைப்போம்” என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத ஒரு மிகப்பெரிய அரசியல் மோசடி என்றும் அவர் விமர்சித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *