ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் – டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்.!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தின் பயனாக ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன், ஈரான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த அனைத்து விஷயங்கள் பற்றியும் தொலைப்பேசியில் உரையாடியதாகத் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் பெருமளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்கள் மற்றும் விவரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு, அவை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் முடிவில், ஹோர்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *