எதிர்காலப் போர்கள் மனிதசக்தி சார்ந்தவை மட்டுமல்ல – அனில் சவுகான் கருத்து.!

Advertisements

எதிர்கால போர்கள் மனிதசக்தி சார்ந்ததாக மட்டும் இருக்காது என்று இந்தியாவின் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் ஷீரடியில் பாதுகாப்பு தள வாட உற்பத்தி ஆலை திறப்பு விழா நடைபெற்றது. இதில், இந்தியாவின் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, போர் மற்றும் போர் முறைகள் வேகமான மாற்றத்தை கண்டு வருவதாகத் தெரிவித்தார்.

எதிர்கால போர்முறை என்பது செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், ரோபோட்டிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பங்கள், துல்லிய தாக்குதல் ஆயுதங்கள், தகவல் ஆதிக்கம் ஆகியவை எதிர்கால போர்களுக்கு உறுதியான வடிவம் அளிக்கும் என்று குறிப்பிட்டார். நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றுடன் சைபர் ஸ்பேஸ், அறிவாற்றல் சார்ந்த போர் ஆகியவை ஒன்றாக நடைபெறும் என்று கூறினார்.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி விட்டது என்றும் ஏற்றுமதி சாதனை படைத்துள்ளது என்றும் தெரிவித்தார். பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 38 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில்100-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *