Global Complex : உலகளாவிய மையம் அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பம்!

உலகளாவிய மையம் அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பம்!

 

ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி செலவில் உலகளாவிய மையம் அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது, பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செயிண்ட் கோபைன் நிறுவனம். 127 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த மையம்மூலம் சுமார் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தபிறகு, கட்டுமான பணிகள் தொடங்கும். இந்த உலகளாவிய மையத்துக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, இதுவரை சுமார் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், சுமார் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *