
காஸாவில் போர் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸாவின், கான் யுனிஸ் நகரில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த, தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.
பின்னர், இதற்கு முன்னதாக கான் யூனிஸ் நகரில் தங்கள் இராணுவ வீரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதுதொடர்பாக, ஹமாஸ் படையினா், இஸ்ரேல் வீரா்களை நோக்கி தாங்கள் துப்பாக்கியால் சுடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 32 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.


