Shubman Gill: காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Advertisements

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில். இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் களமிறக்கப்பட்டார். சுப்மன் கில்லுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லையெனத் தகவல் வெளியாகின.

இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் உடலில் ரத்த தட்டை அணுக்கள் குறைவாக உள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கும் சுப்மன் கில் விரைவில் குணமடைவாரென எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாகக் குணமடைந்த பின்னர் சுப்மன் கில் இந்திய அணியில் இணைவாரென பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *