Thevar Jayanthi: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார்.

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வருகிற 30 -ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற உள்ளது.Thevar Jayanthi

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்கிறார். முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *