
இஸ்ரேல், காசா, ஈரான் ஆகியவற்றில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இந்த வாரத்தில் ஒரு நிலையான தீர்வை எட்ட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது தொழிலதிபர் எலோன் மஸ்க் அமெரிக்கா கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளது பற்றிச் செய்தியாளர்கள் வினவினர். இரு கட்சிகள் உள்ள அமெரிக்காவில் எலோன் மஸ்க் மூன்றாவது கட்சியைத் தொடங்கியுள்ளது வேடிக்கையானது என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே தமது குடியரசுக் கட்சி மாபெரும் வெற்றியைப் பெறறுள்ளதாகவும், இந்நிலையில் மூன்றாவது கட்சி தொடங்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேலுடன் இணைந்து தாங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஈரானுடன் நிலையான உடன்பாட்டைச் செய்துகொள்ள உள்ளதாகவும், காசா பிரச்சனைக்குத் தீர்வை நெருங்கி விட்டதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இந்த வாரத்துக்குள் உடன்பாடு செய்து முடிக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
