
தலைநகர் தில்லியில் கனமழை பெய்து தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தில்லியில் இன்று காலையில் கார்முகில் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. பின்னர் இலேசாகத் தொடங்கிய மழை அதன் பின் வலுவடைந்தது.
ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மெகராலி – பாதர்பூர் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
தேங்கிய நீரில் வாகனங்கள் மெதுவாக இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
