போரை தடுக்க இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகளாகப் பிரிப்பதே தீர்வு

காசா தொடர்பான நிபந்தனைகளை இஸ்ரேல் கடைப்பிடிக்காவிட்டால் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

காசா மக்களின் இன்னலைத் தீர்க்க இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகளாகப் பிரிப்பதே தீர்வாக இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்வு வழங்கப்படும் வரை நீடித்த அமைதி நிலவும் வகையில் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் உடன்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காசா மக்களுக்கு உணவுப்பொருட்களையும் உதவிப்பொருட்களையும் வழங்க ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலர்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசா மக்களின் இன்னலைத் தீர்க்கும் இந்த நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் செப்டம்பரில் பாலஸ்தீன நாட்டை பிரிட்டன் அங்கீகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *