தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Advertisements

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசிக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

பிப்ரவரி 6, 7-ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, பாராளுமன்றத்தில் தி.மு.க. எதிர்த்தது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்ற உறுதியையும் வழங்கினேன்.

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் ஆதரவு நமக்குத் தான் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது என்று கூறினார்.

இதையடுத்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,

* அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்திட பாராளுமன்றத்தில் தி.மு.க. வலியுறுத்தும்.

* ஆளுநர் பதவியை நீக்கும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காக்க நடத்தை விதி உருவாக்க வேண்டும்.

* டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதல்வருக்கும் துணை நின்ற மக்களுக்கும் நன்றி.

* சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.

* மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த முறை தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும். புதிய ரெயில்வே திட்டங்கள், பேரிடர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

* யுஜிசி வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்திப் பிப்.2-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *