
சின்னமனூரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பெருமாள் கோவில் தெருவில் சின்னமனூர் காவல் துறையினர் ரோந்து சென்றபோது இரு சக்கர வாகனத்தில் சந்தேக படும் படியாகச் சுற்றி திரிந்த நபர்களைப் பிடித்துக் காவல் துறையினர் சோதனை செய்தபோதுதமிழக அரசால் தடை செய்யபட்ட சுமார் 40, ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்காகக் கடத்தி வந்தது தெரிய வந்தது பின்பு விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர் காவல்துறையினர்.
கஞ்சாவை கடத்தி வந்த கோகிலாபுரம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது மகன் அபிமன்யு (எ) அதிபன் வ| 29| 24, மற்றும் தேவாரம் பழைய மின்வாரிய அலுவலகத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் பாண்டி 37 | 24, ஆகிய இருவரை கைது செய்த சின்னமனூர் போலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டதில்
கம்பம் பகுதியைச் சேர்ந்த சீனித்தேவர் என்பவரது மகன் தெய்வம் (எ) வெள்ளை தெய்வம் என்பவரிடமிருந்து விற்பனைக்காக வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்தது இதனையடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட கஞ்சாவை விற்பனை செய்த கம்பம் பகுதியைச் சேர்ந்த தெய்வம் (எ) வெள்ளை தெய்வத்தைச் சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்
மேலும் பிடிபட்ட இரண்டு நபர்களையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர், மேலும் யாருக்கு விற்பனை செய்யக் கஞ்சாவை கொண்டு வந்துள்ளனர் எனத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் சின்னமனூர் காவல் துறையினர் தெரிவித்தனர்,
மேலும் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் மது பாட்டீல்கள் விற்பனை செய்து வருவதாகவும் இந்தப் பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெறுவதாகவும் இந்தப் பூஜையில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்வதாகவும் விவசாய நிலங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இந்தச் சாலையைக் கடந்து செல்லும் நிலை உள்ளதால் இப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கஞ்சா பரிமாற்றம் நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்து விற்பனை செய்பவர்கள்மீது இது போன்று கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதியினர் தெரிவித்தனர்.


