Jammu and Kashmir: பயங்கரவாதிகள் 8 பேர் கைது!

Advertisements

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளிலிருந்து தப்பி ஓடிப் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்படுள்ளனர்…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளைக் கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாகப் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளிலிருந்து தப்பி ஓடிப் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வருபவர்களைக் கைது செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் தோடா மாவட்டத்தில் ஆதில் பரூக் பரிதி, ஜாவேத் என்ற முகமது இக்பால், நிஷார் அகமது என்ற முஜாகித் உசேன், தாரிக் உசேன், இஷ்தியாக் அகமது, அஜாஸ்அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.

இவர்களில் பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார். இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராகப் பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஜம்முவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *