Vinayagar Chaturthi: 14 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி விழா!

Advertisements

வைகுண்டபுரத்தில் 14 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி விழா…

நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி விழாஇன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சென்னை, நுங்கம்பாக்கம், வைகுண்டபுரத்தில் அமைத்துள்ள தேவிகருமாரி அம்மன் ஆலயத்தில் 14 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி விழா கோலாகலமாகக் நடைபெற்றது.அங்கு அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு விநாயகர்சிலை காலைத் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இதில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.தொடந்து பக்கதர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாலையில் விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் அன்னதானமும் நடைபெறவுள்ளது.

வரும் ஞாயிற்றுகிழமை காலைச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு பின்னர் விநாயகர்சிலை கடலில் கரைக்கப்படவுள்ளது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழவினர் செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *