வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடை தளர்வு.!

தில்லியில் தீபாவளியையொட்டி வெடிகள் விற்பனைக்கும் வெடிகள் கொளுத்தவும் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

அக்டோபர் 18 முதல் 21 வரை காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிகளை வெடிக்க அனுமதி அளித்துள்ளது.

தீபாவளியையொட்டித் தில்லியில் வெடிகள் கொளுத்துவதால் காற்று மாசுபாடும் ஒலி மாசுபாடும் ஏற்படுவதாகக் கூறித் தில்லியில் வெடிகளைக் கொளுத்த முன்பு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் முன்பு விதித்த தடையை இன்று தளர்த்தியுள்ளது. அதன்படி தீபாவளியையொட்டி அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை வெடிகளை வெடிக்கச் செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

நான்கு நாட்களிலும் காலையில் ஆறு மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரமும், இரவில் எட்டு மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரமும் வெடிகளை வெடித்துக்கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது.

கடைகளில் பசுமை வெடிகள் தான் விற்கப்படுகிறதா? குறித்த நேரத்தைத் தாண்டி வெடிகள் கொளுத்துகின்றனரா? என்பதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ள தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, விதிகளைத் தளர்த்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு தீபாவளியைக் கொண்டாடும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், அதேநேரத்தில் சுற்றுச்சூழலைக் காக்கும் அக்கறையுடனும் உள்ளதாக ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *