G. Marimuthu Death: ஜோதிடம் மெய்யானதா?

Advertisements

ஜோதிடம் மெய்யானதா? அல்லது உயிரைக் களவாடிய கடவுள் உணர்த்தினாரா ? மாரிமுத்து உயிரிழந்த சம்பவம்குறித்து திரை பிரபலங்கள் மத்தியில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது…

தேனி மாவட்டம் வருசநாட்டில் 1966ஆம் ஆண்டுப் பிறந்தவர் ஜி.மாரிமுத்து. இவர், 1999ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘ஆசை’ படம்மூலம் உதவி இயக்குநராகச் சினிமா பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து திரை படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடிகர், இயக்குனராக வந்தார்.

தற்போது மாரிமுத்து உயிரிழந்த சம்பவம் திரை பிரபலங்கள் மட்டும் அல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பபடுத்தியிருக்கு, இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னாடி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகச்சியில் கலந்துக்கிட்ட மாரிமுத்துவிடம் ஜோதிடர் ஒருவர் உங்கள் இடுப்புக்கு மேல பிரச்னை இருக்கிறது எனச் சொன்னார். அதற்குப் பதிலளித்த மாரிமுத்து அதெல்லாம் பொய் என மறுத்து விட்டார்.

இந்நிலையில் அவர் நடித்த சீரியல் காட்சி ஒன்றும் தற்போது வைரல் ஆகி வருகிறது அந்தக் காட்சியில் அவர்க்கு நெஞ்சி வலி வருவது போன்றும் மனசு சரியில்லை ஏதோ நடக்க போகுது எனவும் நடித்திருந்தார் மாரிமுத்து. அதே போன்று தற்போது திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடம் மெய்யானதா? அல்லது உயிரைக் களவாடிய கடவுள் உணர்த்தினாரா? மாரிமுத்து உயிரிழந்த சம்பவம்குறித்து திரை பிரபலங்கள் மத்தியில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *