
இரண்டரை வருட காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளைப் பெரும்பாலான வகையில் நிறைவேற்றாத அரசு திமுக அரசு. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. வெளிப்படை தன்மை இல்லாத ஆட்சியாகத் திமுக அரசு செயல்பட்டு வருகிறது, இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லையெனக் ஜிகேவாசன் கூறினார்.
சென்னை தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில அணித்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முன்னதாகக் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, நேற்று காலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தொலைபேசியில் பேசினேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேப்பி நட்டா அவர்களைச் சந்தித்தேன் நாளை மறுதினம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறேன். ஏன் அவர்களிடம் பேசினேன் என்றால் இன்றைய நிமிடம்வரை அந்தக் கட்சிகளுடன் நான் நட்புரீதியாகப் பழகி வருகிறேன்.
கூட்டணிகுறித்து தமாகப் பொதுக்குழுவில் தெரிவிக்கப்படு
SC/ST மற்றும் சிறுபான்மை சமுதாயம் உயர்வதற்காகத் தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான கட்சியாகத் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கின்றது. எந்தக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்தாலும் மதநல்லிணக்கம் தொடர்பான விஷயங்கள் அங்கு வலியுறுத்தப்படும்.
ஜனநாயக நாட்டில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள் அவர்கள் கொடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு அதனைப் பின்பற்றித் தான் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றனர் அந்த வகையில் அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.நடி
இரண்டரை வருட காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளைப் பெரும்பாலான வகையில் நிறைவேற்றாத அரசு திமுக அரசு. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. வெளிப்படை தன்மை இல்லாத ஆட்சியாகத் திமுக அரசு செயல்பட்டு வருகிறது இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லையெனக் கூறினார்.

