Advertisements

5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்த சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
2020-ம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், கடையைத் தாமதமாக அடைத்ததாகக் கூறி சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரும் தற்போது சிறையில் உள்ளனர். மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும், காவல் துறையின் பொறுப்புணர்வையும் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements


