G. K. Vasan: மின்மிகை மாநிலமாகப் புதுவை உள்ளது!

Advertisements

புதுவை மாநிலத்தை வளமாக்கும் திட்டங்களைப் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுத்தி வருவதாகத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளா் நமச்சிவாயத்தை ஆதரித்து லாஸ்பேட்டை பகுதியில் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.தொடர்ந்து பேசிய அவர்,

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் புதுவை மாநிலம் மேம்பட்டுள்ளது. திட்டங்கள் செயல்பாட்டில் புதுவை மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது. மாணவா்களது வாழ்வில் ஒளியேற்றும் வகையில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு உதவியுடன் மக்கள் நலத் திட்டங்கள் புதுவையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மின் துறையில் மிகைமின் மாநிலமாகப் புதுவை உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் 10 ஆண்டு தொடா் சாதனைகளுக்காகவும், முதல்வா் ரங்கசாமியின் தொடா் சாதனைகளுக்காகவும் என இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் புதுவை மக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவா் செல்வகணபதி எம்.பி., தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *