கரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!

Advertisements

கரூர்: 

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நவ.28ம் தேதிவரை சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவ.16, 17ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாளை (நவ.23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (நவ.24ம் தேதி) இரு நாள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், இருப்பிட மாற்றம் தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (நவ.22ம் தேதி) கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்துப் பங்கேற்றார். இப்பேரணியில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ், கரூர் வட்டாட்சியர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பள்ளி, தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு வாசகங்களைக் கோஷமிட்டு சென்றனர். இப்பேரணி வடக்கு, மேற்கு பிரதட்சண சாலைகள், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, ஜவஹர் கடை வீதி வழியாகச் சென்று கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *