
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து புதுச்சேரியில் தனியார் வேலை வாய்ப்பு சேவையைத் தொடங்கி வைத்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து புதுச்சேரியில் தனியார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். மத்திய அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த வீரராகவனை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தித்த விஜய் சேதுபதி அவர் பணியை கண்டு வியந்தார்.
மேலும் இது தொடர்பாக உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி தற்போது, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி வழங்கினார்.
அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.


