Afghanistan : நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு.!

ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் திடீரென 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், 33.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 65.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து, ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *