எடப்பாடி பழனிச்சாமியின் தில்லிப் பயணத்தை விமர்சித்து சுவரொட்டிகள்..!

Advertisements

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தில்லிப் பயணத்தை விமர்சித்துக் கோவையில் தி.மு.கவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகரின் பல பகுதிகளில் நேற்று இரவு *இதுக்கே பயந்தா எப்படி? இனி தான் ஆரம்பம்* என்ற வாசகங்களுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிச்சாமியின் தில்லிப் பயணத்தை விமர்சித்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தி.மு.கவின் இளைஞரணி மாவட்டத் துணை அமைப்பாளர் மசூது சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் அரசியல் கட்சியினர் இடையே மோதலும் விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படும் முன்பு அதிகாரிகளும் காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதுகாக்கப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *